பக்கம்:பாரதித் தமிழ்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 471

களில் கலந்துகொள்ளாவிட்டாலும், ரஹஸ்யத்திலே கான்ஸ்டன்டைனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பார். வெளியரசுகளின் மூல மாகச் செய்யும் சூழ்ச்சிகளால் இவர் தம் ராஜ்யத் திற்கு அதிகத் தீங்கிழைக்க முடியாது. ஆனல் கிரேக் கர்களுக்குள்ளேயே ககதி பேதங்கள் ஏற்படுத்த இவருக்கு இடமேற்படக் கூடாது. அதற்கிடமேற் பட்டால் பிறகு கிரேக்க ஸிம்ஹாஸனம் கான்ஸ்டன் டைனுக்கு உறுதியில்லை. வ்ெனிஜிலாஸ் பழைய காலத்து நரி. அதனல் அஞ்சத் தக்கதென்று சிலர் நினைக்கக்கூடும். ஆனல் வாலறுந்த நரி-ஆதலால் அஞ்சத் தக்கதன்று.

இந்தோர் ராஜரீக அலங்கோலங்கள் இந்தோர் ஸம்ஸ்தானத்தில் நிகழ்ச்சி பெற்று வரும்-ஸ்த்ரீகளைக்கடத்திக்கொண்டுபோவது ஸம்பந் தமான-அலங்கோலங்களைக் குறித்து ஏற்கெனவே நமது பத்திரிகையில் பேசி யிருக்கிருேம். இப்போது அந்த வதந்திகளெல்லாம் சுத்தப் பொய்யென்று அந்த ஸம்ஸ்தான அதிகாரிகள் ஒரு வருஷம் ப்ரசுரம் செய்திருக்கிரு.ர்கள். சென்ற மறுப்புரை ஸெப்டம்பர் மாஸத்திலே இந்த விஷயத்தைக் குறித்து இந்தோரில் ப்ரசுரமாகும் “மல்லாரி மார்த் தாண்ட விஜயம்’ என்ற பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளிப்படுத்தி யிருக்கிரு.ர்கள். இந்தக் கெட்ட செயல்களுக்குக் காரணமாவோரைக் குறித்து யாரேனும் ராஜாங்கத்தாருக்குத் தகவல் கொடுக்கலாமென்றும், அங்ஙனம் தகவல் கொடுப் போருக்கு வலிமையுடைய அதிகார துஷ்டர்களாலே கேடேதும் நேராமல் ராஜாங்கத்தார் இரண்டு வாரம் வரை பாதுகாப்ப்ார்களென்றும், அந்த அறிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த லிளம்பரத்துக்கப்பால் எவனும் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/470&oldid=605921" இலிருந்து மீள்விக்கப்பட்டது