பக்கம்:பாரதித் தமிழ்.pdf/471

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


472 பாரதி தமிழ்

யாதொரு தகவலும் கொடுக்கவில்லை. அந்தத் தீச் செயல்களில் உயர்ந்த ராஜாங்க உத்யோகஸ்தர் ஸம்பந்தப்பட்டிருந்ததால் எவ்வித ருஜுவும் கிடைக்கவில்லை யென்று ஸம்ஸ்தான அறிக்கை சொல்லுகிறது. ஆனல் உயர்ந்த உத்யோகஸ்தர் சளுக்கு விரோதமாக உயர்ந்த உத்யோகஸ்தர் களிடம் வாக்குமூலம் கொடுக்கத் துணியும் நிர்ப் பாக்யனுக்கு ராஜாங்கத்தார் இரண்டு வாரம் மாத் திரமே பாதுகாப்பருளினல் போதுமா? இதை மஹாராஜா கவனியாதது பற்றி வருத்த மடை கிருேம். இனி பூரீ கோவிந்தராவ் நிகோஷ்காரின் மகளுடைய விவாகத்தின் லம்பந்தம்ாக அவருக் கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மஹாராஜா வின் உத்தரவுப்படி நேர்ந்த அவமானங்களும் துன்பங்களும் மேற்படி நிகோஷ்காராலே கான்பூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு செய்து கொள்ளப்பட்ட பிரமாணப் பத்திரிகையில் விவரிக்கப்பட்டன.

அந்தப் பிரமாணப் பத்திரிகை வெறும் பொய் யென்று மஹாராஜா தெரிவிக்கிரு.ர். மஹாராஜா தாம் நேராக அந்த் விவாகத்தைப் பற்றி எவ்வித மான அபிப்ராயமும் சொல்லவில்லை யென்றும், அதைக்குறித்து விசாரணை செய்யும்படி ஹைகோர்ட் டுக்கு முறைப்படி உத்தரவு கொடுத்ததாகவும், ஹைகோர்ட்டார் அந்த விவாகம் செல்லாதென்று தீர்ப்புச் சொல்லி விட்டார்களென்றும் ஸ்ம்ஸ்தான அறிக்கை தெரிவிக்கிறது. இவ்விஷயம் இந்தோர் “லா ரிபோர்ட்” வரிசையில் ப்ரசுரமாயிருப்பதாகவும் அறிக்கை சொல்லுகிறது. மேலும் இப்போதுள்ள மஹாராஜா சென்ற 10 வருஷங்களாகப் பட்டம் ஆளுகிறார். இதுவரை இவருடைய ஆட்சியின்மீது எவ்விதமான முறையீடுகளும் வெளிப்படவில்லை. இந்தோர் ஸ்ம்ஸ்தானத்தின் வேலையினின்று, ராஜ