பக்கம்:பாரதித் தமிழ்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாமகம்

புரீமான் சி. சுப்ரமணிய பாாதி

24 பிப்ரவரி 1921 ரெளத்திரி மாசி 13

இந்த்ரனை தேவ தேவன் என்ப. மற்ற மனித ருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவர்க்கவன் என்பது குறிப்பு. வட மொழியில் வால்மீகி, காளி தாஸர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தி யையும், இங்கிலீஷில் ஷெல்லியையும், கவிகளின் கவி’ என்று சிறப்பித்துச் சொல்லுகிறார்கள். அதாவது, மற்ற மனிதருக்குக் கவிகளால் எத்தனே புதிய சுவை கிடைக்கிறதோ அத்தனை புதிய சுவை கவிஞருக்கு அவ் வால்மீகி முதலியவர்களிடம் கிடைக்கிறதென்பது குறிப்பு.

அதுபோல கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹாமகக் குளம். இவ்விரண்டும் புண்ய. தீர்த்தங்களுக்குப் புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது. அதெப்படியெனில் முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல் லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களே யெல்லாம் எங்களுக்குக் கரைத்து விட்டுவிட்டுப் புண் யாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/473&oldid=605925" இலிருந்து மீள்விக்கப்பட்டது