பக்கம்:பாரதித் தமிழ்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 பாரதி தமிழ்

பொருட்டு ஆன்றாேர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில ச ட ங் கு க ள் வகுத்திருக்கிரு.ர்கள். கல் தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப் படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலா கலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடி புகும்போது ஒரு சடங்கு நடத்துகிருேம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலி என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுவதைக் கருதுமிடத்தே, அமங்கள மனத்திலும் அமங்களமானது பாவமென்று விளங்கு கிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்ய மென்பதும் வெளிப்படையாம்.

இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத் தைப் போர்த்துக்கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/477&oldid=605931" இலிருந்து மீள்விக்கப்பட்டது