பக்கம்:பாரதித் தமிழ்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 பாரதி தமிழ்

தொழிலாளருக்கும் வேலையாட்களுக்கும் லங்க ஸ்தாபனங்களுக்கும் மு. டி ய டிெ இலாகாவால் கொடுக்கப்படும் அடுப்புக்கரி வகைகளனைத்திற்கும் பணக்.கிரயம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும், வாயு, மின்ஸாரம், டெலிபோன், நீர், சாக்கடை முதலியவற்றுக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும் அச்சட்டம் நியமிக்கும்.

ராஜாங்கப் பணத் தொலைத்தல்’ கமிஷன்

இதனிடையே ருஷிய ராஜாங்கத்தார் . ஒரு விசேஷ ஸ்மிதி யேற்பாடு செய்திருக்கிரு.ர்கள். இந்த ஸ்மிதியில் ஒரு மாஸ் காலத்திற்குள்ளே பணக் கிரயங்கள் என்ற ஏற்பாட்டையே அழித்துவிடுதற் குரிய விஸ்தாரமான திட்டமொன்று சமைத்துக் கொடுக்கும்படி உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள், பாங்க் கணக்கு, ஸோவியட் தொழிற் சாலைகளினிடையேயும் ஸோவியட் ஸங்கங்களி னிடையேயும் பரஸ்பரம் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல் முதலியனவும் அடங்கும். இந்த ஏற்பாடுக ளெல்லாம் விரைவாக அநுஷ்டானத்திற்கு வந்து விடுமென்று மேலே கூறிய பூரீமான் லாரின் என்பவரே அமெரிக்கப் பத்திரிகை யொன்றில் எழுதி யிருக்கிறார். இதே காலத்தில் பூரீமான் லாரினல் சொல்லப்பட்ட மற்றாெரு யோசனையும் நிறைவேற்றப்படு மென்று தெரிகிறது. இந்த யோசனையை ஏற்கெனவே ராஜாங்கத்தார் அங்கீ காரம் புரிந்துவிட்டனர். அதாவது, ரயில் பாதை வழியாகப் போகும் ஸாமான்களுக்குத் தீர்வைப் பணம் வசூல் செய்யாமை, ஏறக்குறையப் பெரும் பான்மை ரயில்வே யாத்திரைக் கட்டணங்கள் வாங்குவதை நிறுத்திவிடுதல் முதலியவற்றைக் குறித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/479&oldid=605934" இலிருந்து மீள்விக்கப்பட்டது