பக்கம்:பாரதித் தமிழ்.pdf/480

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுமைகள் 481

ஆரம்பங்கள்

1918-ம் வருஷத்தில் மாஸ்கோவில் நடை பெற்ற ஸோஷலிஸ்ட் ஸ்மாஜத்தில் குழந்தை களுக்குக் கொடுக்கும் ஆஹாரம் முதலியவற்றுக்கும். தொழிலாளருக்குக் கொடுக்கும் ஆஹாரம், துணி, வாலஸ்தலம் முதலியவற்றுக்கும் பணம் வாங்கக் கூடாதென்ற யோசனை பூரீமான் லாரினலே சொல் லப்பட்டது. அதை ஸ்மாஜத்தார் ஒரு மனதுடன் அங்கீகாரம் செய்து கொண்டனர். அவ்வருஷ ஏப்ரல் மாலத்தில் குழந்தைகளுக்கெல்லாம் ருஷி யாவில் இனம் ஆஹாரம் போடுவதாக ராஜாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குழந்தைகளின் வயதளவு 14-ஆக வைத்திருந்தது பின்பு 16-ஆக உயர்த்தப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, வேலேயாட்களுக்கொல்லாம் இனமாகத் துணி கொடுக்கப்பட்டது. அப்பால் சவர்க்காரம் எல்லாத் தொழிலாளருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அப்பால் சாதாரணக் கடிதங்களுக்குத் தபாற் கிரய மாகப்பணம் செலுத்தும் வழக்கம் நிறுத்தப்பட்டது. அப்பால் வேலையாட்களின் கூலிக்குப் பணம் கொடுப் பதனிடத்தில் ஸாமான் கொடுப்பதென்றேற் பட்டது. இப்போது மேற்கூறியவற்றை யெல்லாந் திரட்டி, ஒரேயடியாக ஸ்ர்வ விஷங்களிலும் பண மில்லாதபடி செய்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

உண்மையான புதுமை

மனுஷ்ய நாகரிகத்தின் ஆரம்பகாலந் தொட்டே பனப் பழக்கமிருந்து வருகிறது. இதல்ை விளைந்த துன்பங்கள் எண்ணற்றன. அந்தப் பழக்கத்தை இப்போது மனித ஜாதியில் பத்திலொரு பங்கு ஜனத் தொகையை ஆளும் ராஜாங்கத்தார் திடீ ரென்று நிறுத்த உத்தேசிக்கிறார்கள். இதனால்

பா. த.-31