பக்கம்:பாரதித் தமிழ்.pdf/482

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 483

காரிகள் அவர் விருப்பத்தைத் தாமும் ஆதரிக்க மாட்டார்கள்; லார்ட்-ரீடிங் ஆதரிக்க இடம் கொடுக்கவும் மாட்டார்களென்று தோன்றுகிறது. இங்குள்ள அதிகாரி வர்க்கத்தார் பாக்ய ஹlனராகிய (ப்ரான்ஸ் தேசத்து) (b) பூர் (b) போன் ராஜ குடும் பத்தாரைப் போலவே எதனையும் புதிதாகத் தெரிந்துகொள்வதுமில்லை. எதனையும் மறப்பது மில்லை என்று “ஹிந்து'’ பத்திராதிபர் எடுத்துக் காட்டியிருப்பது மெய்யேயாம். இவர்களைச் சீர் திருத்து முன்பு இந்தியாவுக்கு ப்ரிடன் வேறென்னசீர் திருத்தங்கொடுத்த போதிலும் இந்தியாவில் அமைதி யேற்படாதென்பதுதிண்ணம். பரிபூர்ணஸ்வராஜ்யங் கொடுப்பதே இந்தியா, ப்ரிடன் இரண்டு தேசங் களுக்கும் ஹிதமான வழி; அதுதான் சரியான சீர் திருத்தம். மற்ற எவ்விதமான சீர்திருத்தங்களையும் இங்குள்ள அ தி கா ரி க ள் குட்டிச்சுவராக்கி விடுவார்கள்.