பக்கம்:பாரதித் தமிழ்.pdf/483

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுமைகள்

காளிதாஸன் 5 tortå. 1 92 1 ரெளத்திரி மாசி 22

இல்லாத காலிலே நோவு தெரிதல்

ஐரோப்பிய மஹாயுத்தத்தில் கால் பறி கொடுத்த கூட்டத்தார் ப்ரான்ஸ் தேசத்தில், இதர தேசங்களைப் போலவே ஆயிரக் கணக்கான ஜனங்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நவீன முறை யில் மர்க் கால்கள் செய்து கொடுக்கப்பட்டிருக் கின்றன. இந்தக் கால்கள் மிகவும் லெளகர்யமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் சிறிது காலத்திற்குள் அவற்றை ஸ்ாமான்யக் கால் களாகவே பாவித்து விடுவதாகத் தெரிவிக்கப்படு கிறது. மனுஷ்யனுடைய மனதின் விநோத சுபா வங்களைக் கருதுமிடத்தே இஃதோர் ஆச்சரியமில்லை யெனலாம். ஆனல் இதற்கு மேலே மற்றாெரு விநோதமான அனுபவத்தைக் குறித்துச் சில தினங்களின் முன்னே லண்டன் டைம்ஸ்’ பத்திரி கையில் ப்ரசுரம் செய்யப்பட்டிருந்த குறிப் பொன்றை நோக்குமிடத்தே மிகவும் ஆச்சர்யம் விளைகிறது. பாரிஸ் பட்டிணத்தில் அநேக ப்ரபல வைத்யர்கள் இஃதுண்மை யென்று ஒருமைப்பாடு தெரிவித்திருக்கிறார்களாம். அதாவது, மேற்படி மரக்கால்களின் பாதத்தில் நோவு தெரிவதாக எத்