பக்கம்:பாரதித் தமிழ்.pdf/485

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 பாரதி தமிழ்

கிறதென்று சொல்லி அதனைக் கண்டனம் பண்ணி யிருக்கிரு.ர். 1867-ஆம் வருஷத்தில் (f) பீனியன் பழிச் செயல்கள் லண்டனில் ஐர்லாந்தியரால் நடத் தப்பட்டபோது கார்டினல் மானிங் கொடுத்த எச்ச ரிக்கையைத் தாம் இப்போது மீட்டும் கொடுப்பதாக அவர் தெரிவிக்கிரு.ர். அதாவது இப்போது ஸின் பினர்கள் ஆங்கிலேயருக்கு விரோதமாக, ஐர்லாந் தில் ஏராளமாகவும் இங்கிலாந்திலே சொற்பமும் நடத்தி வரும் கொலைச் செயல்கள் முதலியன கிறிஸ்தவ மதத்துக்கும் கடவுளுடைய விதிகளுக்கும் விரோதமென்பது இருவடைய கருத்து. மன்தர் பரஸ்பரம் பகைக்கவாயினும் கொல்லவாயினும் கூடாதென்றும், ஸ்ஹோதரரைப் போல் நேசிக்க வேண்டு மென்றும் யேசு கிறிஸ்து நாதர் கட்டளே யிட்டிருப்பதை உத்தேசித்து, அவருடைய சிலு வைக்கு ஐரிஷ் ப்ரதிநிதியாகிய கார்டினல் போர்ன் இங்ஙனம் பூரீமுகம் பிறப்பித்தமை முற்றிலும் பொருத்த முடைய செய்கையேயாம். பகைவர்கள் நம்மைத் துன்புறுத்தும் போதும் நாம் அவர்கள் மகிழ்ச்சி யடையும்படி துன்பத்துக்குள்ளாகி நிற்க வேண்டுமேயன்றி, அவர்களைத் துன்புறுத்தலாகா தென்பது கிறிஸ்தவ தர்மம். ஆனல் ஐரோப்பிய மஹா யுத்தத்தில் யேசு கிறிஸ்துவின் பக்தர்கள் பரஸ்பரம் லக்ஷக் கணக்காக பீரங்கிகளாலும், எறி குண்டுகளாலும், விஷக் காற்றாலும் கொன்ற ஸ்மயத்தில் இந்தப் பாதிரிகள் எங்கே போயிருந் தார்கள்? ரோமாபுரியில் போ பானவர் மாத்திரம் இடைக்கிடையே யுத்தத்தை நிறுத்தி ஸமாதானந் தேடினுல் நல்லதென்று யுத்தத்தின் பிற்பகுதிக் காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனல் அந்தந்த தேசத்து குருக்கள் போரைக் கண்டித்து ஏதேனும் சொன்னர்களா? மூலைக்கொரு பகr மாகத் தத்தம் கrதியே நியாயமென்றும், தத்தம்