பக்கம்:பாரதித் தமிழ்.pdf/486

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 387

கrவிக்கே வெற்றியும் எதிரிகளுக்குத் தோல்வியும் கொடுக்க வேண்டுமென்றும் யேசு கிறிஸ்துவையே பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்! இப்போதும் ஆங்கி லேயர் சட்டமின்றி ஐர்லாந்தில் செய்து வரும் பலாத்காரக் கொடுஞ் செயல்களைக் கண்டிக்காமல் ஸின் பீனரை மாத்திரம் கண்டிப்பதில் பயனில்லை. பயிற்சியற்ற, தொகை குறைந்த, திறமை மிகுந்த படையை வைத்துக்கொண்டு ஸின் பீனர் எவ்விதக் கார்யங்கள் செய்கிறார்களோ அதே விதமான செயல்கள் பயிற்சி வாய்ந்த தொகையேறிய திறமை குன்றிய படையைக் கொண்டு ஆங்கிலேயாராலே செய்யப்படுகின்றன. w

இங்கிலாந்திலேகூட மிஸ்டர் ஆஸ்க்வித் முதல் லண்டன் ‘டைம்ஸ்’ பத்திராதிபர் வரை பல திறப் பட்ட ராஜ தந்திரிகளும் ஐர்லாந்தில் இப்போதுள்ள பரிதாபகரமான நிலைமைக்கு வலின்பீன் படையையும் ஆங்கிலப் படையையும் ஒருங்கே பொறுப்பாக்கிக் கண்டித்துப் பேசுகிரு.ர்கள். யதா ராஜா, ததா ப்ரஜா’. ராஜாங்கமே சட்டத்தை மீறி திருஷ் டாந்தங் காட்டினல் பிறகு ஜனங்கள் சட்டத்தை மீறி நடக்கும்போது அவர்களைக் குற்றங்கூற வாய் ஏது?

பாதிக் கல்யாணம்

“ராஜாவின் மகளை விவாகம் பண்ணிக்கொள்ள எனக்கு ஸம்மதம். அந்தப் பக்கத்து ஸம்மதந் தெரிய வேண்டியதுதான் கு ைற வு. எனவே பாதிக் கல்யாணம் ஆய்விட்டது” என்று ஒரு விகட கவி சொன்னளும். அதுபோல் எமீர் (f) பெய்ஸ் அல் மெஸ் பொடேமியாவுக்கு ராஜாவாக இருக்கத் தாம் ஸ்ம்மதப்படுவதாகத் தெரிவிக்கிறார். இவரும் இவ ருடைய பிதாவும், வேலிக்குள்ளிருந்த பாம்பைப் பிடித் துக் காதுக்குள் விட்டுக்கொள்வது போல,