பக்கம்:பாரதித் தமிழ்.pdf/487

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


488 பாரதி தமிழ்

ஆங்கிலேயர்களையும் ப்ரெஞ்சு ஜனங்களையும் மத்ய ஆசியாவுக்கு நல்வரவேற்று உபசரித்த மஹான்கள்: தற்கால லெளகர்யமொன்றைக் கருதி நீண்ட கால யோசனையை இழந்து நடந்த கூட்டத்தைச் சேர்ந்த வர்கள். இந்த எeர் பெய்ஸ் லில், ஏற்கெனவே, தம்மை ஸிரியாவுக்கு ராஜாவாகச் செய்வார்க ளென்று எதிர்பார்த்து இறுதியில் ப்ரான்ஸ் தேசத் தார் அதை விழுங்கிச் செல்லத் தாம் ஏமாறிப் போன பிரபு. இப்போது இவர் லண்டன் நகரத்தில் போய்ப் பத்திராதிபர்களுக்குக் குழையடித்துக் கொண்டிருக்கிறார், மெஸ்பொடேமியாவில் ஆங்கி லேயர்கள் வீணுக ஆட்களையும், செல்வத்தையம் பலி கொடுத்து வருவதில் ஆக்ஷேபம் செலுத்துவோ ரிடையே தம்மையும் சேர்த்துக்கொள்ள வேண்டு மென்று இவர் “டெய்லி டெலிக்ராப்’ பத்திரிகைக் கார்யஸ்தரிடம் தெரிவித்திருக்கிரு.ர். ப்ரி டி வி: மந்த்ராலோசனையையும் உதவியையும் கொண்டு மெஸ்பொடேமியாவை ஆளக்கூடிய ராஜாங்க மொன்றை அராபியர் ஸ்தாபனம் செய்ய ஆயத்த மாக இருக்கிறார்களாம். பிரிடிஷாருடைய ராஜரீக திரவிய உரிமைகளுக்குப் பங்கம் நேராதபடி அரப் கவர்ன்மெண்டார் உறுதி மொழி கொடுப்பார் களாம். தேசத்தின் இயற்கைப் பொருள்களைக் காட்டி ஏராளமான கடன் வாங்க முடியுமாம்........ ஐயோ, பாவம்! எeர் பெய்ஸ் அல் பகற்கனவு காண் கிரு.ர். இவர் ஹிந்துதேச சரித்திரம் வாசித்திருப்பா ரானல், தம்முடைய தேச ஆட்சியாகிய கரும்புத் தோட்டத்தைப் பிறர் ஆளாமல் தாம் ஆளச் செய்யும்படி இங்கிலிஷ் யானையை உதவிக் கழைத் திருக்க மாட்டார். இனி கால சக்ரத்தின் சுழற்சியால் மெஸ்பொடேமியாவில் அரப் ஆட்சி ஏற்பட்டாலும், அதில் எமீர் பெய்ஸஅலுக்கு யாதொரு ஆதிக்கமும் இராதென்பது திண்ணம்.