பக்கம்:பாரதித் தமிழ்.pdf/489

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


490 பாரதி தமிழ்

பாரமார்த்திக தர்சனம்

இங்ஙனம் லெளகிக வெற்றியை வேண்டு வோருக்கு மாத்திரமே பத்திரிகை முக்யமான தென்று கருதல் வேண்டா. ‘அவனன்றி ஓரணுவும் அசையாது” என்ற பெரியோரின் வாக்குப்படி உலகத்து நிகழ்ச்சிகளெல்லாம் கடவுளுடைய செயல்களேயாதலால், பத்திரிகை படித்தல் தெய்வ பக்தியுடையோருக்கும் பேராநந்தம் விளைத்தற் குரியது. கடவுள் மனித உலகத்தை எங்ஙனம் நடத்திச் செல்கிருனென்பதை விளக்குவதே சரித் திரப் பயிற்சியின் மேலான பயனென்று பூர்வாசார் யர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அங்கனமாயின், இந்த அம்சத்தில் சரித்திர் நூல்களைக் காட்டிலும் பத்திரிகைகள் பன்முறை அதிகமான பயன் தரு மென்பதில் ஐயம் சிறிதேனுமுண்டோ?

ஆளுல் தற்காலப் பத்திரிகைகளில் பகடிபாத குணம் அதிகமாகக் காண்பிக்கப்படுகிறது. தேசப் பகrபாதங்களும் ககதிப் பிரிவுகளும் மலிந்து கிடக் கின்றன. இவற்றை நீக்கிவிட்டால் பத்திரிகையின் மஹிமை இன்னும் நெடிதோங்கி வளர இடமுண் டாகும். இதனிடையே, இந்தியாவிலுள்ள பத்திரி கைகள் ஐரோப்பிய, அமெரிகப் பத்திரிகைகளி லிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸ் மாகச் செல்லும் திறமை-இவற்றில் இந்தியாவி லுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப்பத்திரிகை களின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத் துக்கிடமாக இருக்கிறது. கடிதங்களெழுதுவோரில் பலர் இலக்கணப் பயிற்சிகூட இல்லாமல் பத்திரிகைக் கெழுதத் துணிகிறார்கள். அவற்றைப் பத்திராதி