பக்கம்:பாரதித் தமிழ்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலக் கண்ணுடி 491

பர்கள் சில ஸமயங்களில் பிழை களையாமலே ப்ரசுரம் செய்து விடுகிறார்கள். இதுவுமன்றி இலக்கணப் பயிற்சியற்ற சிலர் பத்திராதிபராக இருக்கும் விநோ தத்தையும் இந் நாட்டிலே காண்கிருேம். நவீன நாகரிகத்தின் முக்யச் சின்னங்களிலொன்றாகிய பத் திரிகைத் தொழிலில் நாம் மேன்மை பெறவேண்டு மால்ை, மேற்கூறப்பட்ட பிழைகளைத் தீர்த்துக்

கொள்ளக் கடவோம்.

தொழிலாளர் கிளர்ச்சி

சில தினங்களின் முன்பு பெல்ஜியத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொழிலாளிகள் கைப்பற்றிக் கொண்டார்களென்று ஒரு செய்தி கிடைத்திருக் கிறது. எனவே பொது உடைமைக் ககதி என்ற காட்டுத் தீ ஐரோப்பா என்ற மனுஷ்ய வனத்தில் ருஷியா முழுவதையும் சூழ்ந்து கொண்டது மன்றி மற்ற இடங்களிலும் அங்கங்கே திடீர் திடீர் என்று வெடித்துத் தழல் வீசி வருவது காண்கிருேம். போல்ஷெவிஸ்ட் கொள்கையை மத்ய ஆசியாவில் பரவவிடக் கூடாதென்றெண்ணும் ஆங்கிலேய மந் திரிகள் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்த்ரியா, துருக்கி, ப்ரான்ஸ் முதலிய நாடுகளில் மிகுதியாகவும், இங்கி லாந்து, நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க் முதலிய தேசங்களில் சற்றே மட்டாகவும் அக் கொள்கை வியாபித்து வருவதை எங்ஙனம் ஸஹறிக்கி ருர்ளென்பது புலப்படவில்லை. என்ன செய்யலாம்? ஆங்கிலேயப் பழங்கதை யொன்றிலே சொல்லப் பட்டதுபோல, கான்யூட் ராஜா சொல்லுக்குக் கடல் கீழ்ப்படிந்து நடக்குமா?

ஜப்பானில் ஜாதி பேதம்

நான் ஜாதி பேதத்துக்கு நண்பனல்லேன். இந்தியர்களெல்லாரும், அல்லது ஹிந்துக்களெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/490&oldid=605952" இலிருந்து மீள்விக்கப்பட்டது