பக்கம்:பாரதித் தமிழ்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ரிஷிகள் கடன்’

ருமான் சி. சுப்பிரமணிய பாரதி

21 tori 3: 1 9 2 1 ரெனத்திரி பங்குனி 8

கல்கத்தா சர்வகலாசாலை விசாரணை ஸ்பையின் முன்னே கீர்த்தி பெற்ற பாரத புத்திரர் ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையொன்றில், பூ ர் வ காலத்து இந்தியர்கள் என்ன நோக்கத்துடன் கல்வி கற்பித்து வந்தன ரென்பதைச் சுருக்கிக் காட்டும்படி பின்வருமாறு சொல்லுகிறார் :

“இந்தியாவில் கல்வியைப்பற்றிய கொள்கை இன்னதென்பது இந்திய சாஸ்திரங்களில் தெரிந்த, குறிப்பான பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. இக் கொள்கை குறைந்த பகrம் முப்பது நூற்றாண்டாக இப்தியாவின் வாழ்க்கையை ஆண்டு வந்திருக்கிறது. எனவே, அதனைத் தெளிவுபடச் சொல்லுதல் அவசிய மாகிறது........ என் வசத்திலிருக்கும் ஆதாரங்களை நான் மிகவும் ஜாக்ரதையாக ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன். ஆதலால் ஜாக்ரதையான பாஷையை, ஜாக்ரதையான பதங்களுடனே வழங்கு வேன். கல்வியைப்பற்றிய இந்திய சித்தாந்தத்தைப் பின்வருமாறு எடுத்துக் காட்டலாம் :

ஒவ்வொரு மனிதனும் சில கடமைகளுடனே பிறக்கிருன்; இவ்ற்றை சாஸ்த்ரங்கள் கடன்கள்’ (ரிணங்கள்) என்று கூறும். இவையாவன :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/493&oldid=605956" இலிருந்து மீள்விக்கப்பட்டது