பக்கம்:பாரதித் தமிழ்.pdf/494

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரிஷிகள் கடன் 495

1. (ஆத்மாவை ஆளும்) தேவர் கடன்.

2. (தேச பிதிரர் உட்பட) பிதிர்க்கள் கடன்.

3. சுற்றத்தார்க்கும், மற்ற மனிதர்க்கும் இறுக் கப்படும் கடன்.

4. உணர்வு வாய்ந்த ஜீவ ஜந்துக்கள் அனைத் திற்கும் செலுத்தவேண்டிய கடன்.

5. இவையனைத்திலும் மேலாக ரிஷிகளுடைய கடன். தனது வாழ்க்கைக்குப் பிரமாணமாகிய நாகரிகத்தின் புராதன ஸ்தாபகர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனே முக்கியமானது, முதன்மைப் பட்டது. ரிஷிகளுக்குச் செலுத்தவேண்டிய இந்தக் கடனே இறுக்கும் நெறி யாதெனிலோ வித்யாப் யாஸம்; கல்விப் பயிற்சி. அதாவது, அறிவை அதன் பொருட்டே தேடுதல்.

இப்படிப்பட்ட அற்புதமான கொள்கையி னின்றும் தோன்றி வளர்ச்சி பெற்றதாகிய அற்புத மான இந்தியக் கல்வி முறையைப் பதினெட்டாம் நூற்றாண்டில், நம்மவர் திடீரென்று கைவிட்டுவிட்ட விஷயத்தை பூரீமான் எஸ். கே. தத்தர் என்பவர் 1921 ஜனவரி இந்திய இளைஞர் (யங்மென் ஆப் இந்தியா) பத்திரிகையில் எழுதியிருக்கும் கல்வி விவகாரம்’ என்ற மகுடமுள்ள வ்யாஸ்த்தில் மிகவும் லாங்கோபாங்கமான சரித்திர விவரங்களுடனே குறிப்பிட்டிருக்கிரு.ர்.

இதன் மத்யகால வடிவம் நமக்கெல்லாம் நன் கத் தெரியும். அதாவது மஹமதியர்களின் காலத் நீ முந்தி அநேக நூற்றாண்டுகளாகவும் மஹமதிய ஆட்சியின் காலத்திலும் இந்தியாவில் எத்தகைய கல்விமுறை ருந்ததென்பதை நாம் அறிவோம். இவை மஹமதிய நூல்களினின்றும் ஹிந்து சாஸ்த் திரங்களில் பிற்காலத்து சாஸ்த்ரங்களினின்றும் பின்