பக்கம்:பாரதித் தமிழ்.pdf/496

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரிஷிகள் கடன் 497

விழுந்ததின் காரணம் யாதெனில்; பூரீமான் எஸ். கே தத்தர் சொல்லுகிறார் :

“இத்தக் கல்விக்கு திரவிய லாபமில்லாது போயிற்று. இனி, மீள, என்றேனும் ஏற்படக் கூடு மென்ற நம்பிக்கையும் இல்லாமற் போய்விட்டது. ஆதலால், இந்தியர்கள் இந்தக் கல்வியை ஆதரிக்க மனமில்லாதோராயினர்’ என்றார்.

ஐரோப்பாவின் கல்வி முறை அந்த சமயத்திலே தான் ஐரோப்பாவிலே மத ஸம்பந்தங்களை வேர றுத்து சுத்த லெளகிகமாக மாறிக்கொண்டிருந்தது. எனவே ஐரோப்பியக் கல்வி ராஜாங்கத்தாரால் இந்த தேசத்தில் வற்புறுத்தப்பட்ட காலத்தில், அது மத ஒழுக்கங்களை ஆதாரமாகக் கொண்ட இந் நாட்டுக் கல்வி முறையுடன் சிறிதேனும் அனுதாப மில்லாததாயிற்று.

மேலே காட்டிய அறிக்கையில் இந்தியாவின் கல்வி நோக்கத்தைக் குறித்துக் காட்டுமிடத்தே “கல்விப் பயிற்சி'யாவது அறிவை அறிவின் பொருட் டாகவே தேடுதல் என்று விளக்கியிருக்கிரு.ர். அதாவது “திரவிய லாபத்தை"க் கல்விப் பயிற்சிக்கு லசுகியமாகக் கொள்ளாமல்; அறிவுப் பயிற்சி தன் அளவிலே செய்யத் தக்கதென்றும், செய்தற்குரிய கடமையென்றும் தெரிந்து கொள்ளுதல்.

இந்தியக் கல்விக்கு லக்ஷணம் இஃதால்ை பதி னெட்டாம் நூற்றாண்டில் அது திரவிய லாபந் தாராமை பற்றிக் கைவிடப்பட்டதென்று சொல் லுதல் முன்னுக்குப் பின் முற்றிலும் முரண்படுகிற தன்றாே?

பா. த.-32