பக்கம்:பாரதித் தமிழ்.pdf/497

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியாவின் அழைப்பு

19 g 9&o 1921 துன்மதி ஆடி 4

இஃது (யுனைடெட் ஸ்டேட்ஸ், மி ஷி க ன் மாகாணம், தெத்ருவா நகரத்திலுள்ள பூரீமதி மாட் (d) ரால்ஸ்டன் ஷர்மன் என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும், பூரீமான் சி. சுப்பிர பாரதியால் மொழி பெயர்க்கப்பட்டது.)

வேண்டுகோள்

அன் பிற் கினிய இந்தியா! அகில மதங்கள், நாடுகள், மாந்தருக் கெல்லாம் தாயே! எங்கள் உணர்வினைத் தாண்டிய சேய் நெடுங் காலத்தின் முன்னே சிறந்தொளிர் குருக்களை யளித்துக் குலவயங் காத்தன. திருக்கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை உலகினுக் களித்தாய்; உனதொளி ஞானம் இலகிட நீயிங் கெழுந் தருளுகவே! விடுதலை பெறநாம் வேண்டிநின் மறைவு படுமணி முகத்தைத் திறந்தெம் பார்வைமுன், வருக நீ !. இங்குள மானுடச் சாதிகள் பொருளகந் தவிர்ந்தமை வுற்றிடப் புரிகநீ ! மற்றவர் பகைமையை அன்பினல் வாட்டுக! செற்றவர் படைகளே மனேயிடந் திருப்புக !