பக்கம்:பாரதித் தமிழ்.pdf/498

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இங்தியாவின் அழைப்பு 499

தாயே, நின்றன் பண்டைத் தநயராம் மாயக் கண்ணன், புத்தன், வலிய சீர் இராமனும், ஆங்கொரு மஹமது மினையுற்ற விராவுபுகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் ! ‘'தோன்றினேன்’ என்று சொல்லி வந்தருளும் சான்றாேன் ஒருமுனி தருகநீ எமக்கே ! மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர் மாசற வணங்கி மக்கள் போற்றிடத் தவித்திடுந் திறத்தினர் தமைப் போலின்றாெரு பவித்திர மகனைப் பயந்தருள் புரிகநீ ! எம்முன் வந்து நீதியின் இயலைச் செம்மையுற விளக்குமொரு சேவகன அருளுக நீ!

உத்தரம்

கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்? உலகப் புரட்டர் தந்திர உரையெலாம் விலகத் தாய்சொல் விதியினேக் காட்டுவான். மலைவு செய்யாமை: மனப்பகை யின்மை : நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை : தீச்செயல் செய்யும் அரசினேச் சேராமை; ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம். வருக காந்தி ! ஆசியா வாழ்வே ! தரும விதிதான் தழைத்திட உழைப்பாய். ஆன்மா அதனல் ஜீவனை யாண்டு மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளிய்ை! பாரத நாட்டின் பழம்பெருங் கடவுளர் வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்திய்ை ! மானுடர் தம்மை வருத்திடும் தடைகள் ஆனவை யுருகி அழிந்திடும் வண்ணம் உளத்தினை நீ கனல் உறுத்துவாய் ! எங்கள் காந்தி மஹாத்மா நின்பாற் கண்டனம்!