பக்கம்:பாரதித் தமிழ்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

பாரதி தமிழ்

மாந்தருட் காண நாம் விரும்பிய மனிதனே ! நின்வாய்ச் சொல்லில், நீதி சேர் அன்னை தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம் தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம் எழுந்தோம்; காந்திக் கீந்தோம் எமதுயிர். இங்கவன் ஆவிக் கொள்கை வென்றிடவே. அன்றைக் குணவுதான் அகப்படு மாயின் நன்றதில் மகிழ்வோம்; விடுதலை நாடி எய்திடுஞ் செல்வ எழுச்சியிற் களிப்போம்: மெய்திக ழொற்றுமை மேவுவோம்; உளத்தே கட்டின்றி வாழ்வோம்: புறத்தளைக் கட்டினே எட்டுணை மதியா தேறுவோம்; பழம்போர்க் கொலைத் தொழிற் கருவிகள் கொள்ளா தென்றும் நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும் அறிவுங் கொண்டே அரும்போர் புரிவோம் வறியபுன் சிறைகளில் வாடினும்; உடலை மடிய விதிப்பினும்; “மீட்டு நாம் வாழ்வோம்’ என் றிடியுறக் கூறி வெற்றி யேறி, ஒடிபடத் தளைகள், ஒங்குதும் யாஅமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/499&oldid=605965" இலிருந்து மீள்விக்கப்பட்டது