பக்கம்:பாரதித் தமிழ்.pdf/500

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜர்லாந்தும் இந்தியாவும்

காளிதாஸன்

19 භූණර්‍ය 1921

மஹாயுத்தம் நடக்கும் காலத்தில், எடிஸன் என்ற அமெரிக மின்ஸார சாஸ்திரியின் விலையுயர்ந்த ஆரா ய் ச் சி க் கூடமொன்று தீப்பட்டெறிந்து போயிற்று.

அதுபற்றிச் சில நண்பர்கள் அவரிடம் துக்க விசாரணை புரிந்து கடிதமெழுதி யிருந்தார்கள். அதற் கவர் சொன்னர் :-"என் கஷ்டம் ஒரு கஷ்டமா ! அதோ! ஜெர்மனியில் கைஸர் சக்கரவர்த்தி இருக் கிறார், பாருங்கள். அவர் ஒருவரையும், அவருடைய பலமற்ற துணைவர் ஒரிருவரையும் எத்தனையோ அரசுகள் கூடி எத்தனையோ வகைகளால் போர் புரிகின்றன. அந்த ஒரு மனிதர் என்ன செய்வார், பாவம்! எனவே எனக்கு ஏதேனும் லங்கடம் நேரும் போதெல்லாம் நான் நம்மைக் காட்டிலும் எத் தனையோ மடங்கு அதிக பயங்கரமான விபத்துக் களாலே சூழப்பட்டிருக்கும் கைஸ்ரை நினைத்து மனந் தேறுகிறேன்’ என்றாராம்.

அக்காலத்தில் இ க் க ைத வெளியிடப்பட் டிருந்தது தொடர்ச்சியாகப் பத்திரிகை படித்து வரும் நண்பர்களிலே பலருக்கு ஞாபகமிருக்கலாம். அது போல், இந்தக் காலத்தில் நாம் மிஸ்டர் லாய்ட்