பக்கம்:பாரதித் தமிழ்.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐர்லாந்தும் இங்தியாவும் 503

அஃதொருவனை இரண்டாக வெட்டிக் கொன்ற பின்னர் அவனுக்கு ம்ணம் புரிவிப்பதாகக் கூறுதல் போலும். எனவே, அல்ஸ்டர் என்றாெரு பதார்த்தம் இருப்பதன் உண்மையை நன்குண்ர்ந்த பூரீமான் தெவலேரா, தாம் தமது குடியரசுக் கொள்கையை விட்டு ‘ஸ்மட்ஸ் ஸ்வராஜ்யத்தை அங்கீகரிக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆளுல் அல்ஸ்டர் தனது தனிப் பார்லிமெண்டை விட்டுவிட வேண்டு மென்றும் வற்புறுத்தினர். இங்ஙனமிருக்க, முன்பு யூனியனிஸ்ட் தலைவராக இருந்து இங்கிலீஷ் கவர்ன் மெண்டினிடமுள்ள அளவிறந்த பக்தியால், அதனை எதிர்த்துப் போர் செய்யப்படைகள் தயார் செய்தவ ராகிய ஸர் எட்வர்ட் கார்ஸனுடைய பட்டத்தில் இப்போதிருக்கும் அல்ஸ்டர் ப்ரதம மந்திரியான ஸர் ஜேம்ஸ் க்ரேக்:லண்டன் சமாதான ஸங்கத்திற்குத் தம்மை ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் அழைத்திருப் பதைக் குறித்துப் பேசிய உதாளiன மொழிகளே ராய்ட்டர் தந்திகளினிடையே காணலாம்.

இங்கிலாந்திலும் லார்ட் டெர்பி முதலியவர்கள் மிஸ்டர் ஜ்யார்ஜைக் கடலில் கவிழ்த்து விடுவதற் குரிய யோசனைகள் இப்போது தீவிரமாகப் புரிவதன் காரணம் ஐர்லாந்துக்கு அ வ ர் ஸ்வராஜ்யங் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தாலே யன்றிப்

ல்லை. கான்ஸர்வடிவ் கrயார் கைவிட்டால் பிறகு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கு பஸிபிக் சமுத்திரந் தான் கதி.

இங்ஙனம் ஐர்லாந்து விஷயத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் இருதலைக் கொள்ளி எறும்பு போல இடர்ப்ப்டுதல் ஒருபுறமிருக்க, இந்த சமயத்தில் இந்தியராகிய நாமும் அவரிடம் ஒரு செய்தியை மிக நன்கு வற்புறுத்திக் கூற விரும்புகிருேம்.