பக்கம்:பாரதித் தமிழ்.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


504 பாரதி தமிழ்

அதாவது, ஐர்லாந்தைச் சென்ற பல நூற் ருண்டுகளாக் மீட்டும் மீட்டும் போரில் அடக்கி, அதன் விடுதலை வேட்கையை மறுத்து வந்தீர்கள். ஐர்லாந்து மிகச் சிறிய நாடு. உண்மையில், இப் போதுகூட இங்கிலாந்தினலே ஜர்லாந்தைப் போரில் மடக்கிவிட முடியும்.

அப்படியிருந்தும், உலக முழுமையிலும் எழுச்சி பெற்றிருப்பதாகிய, பெரிதோர் தர்மக் கிளர்ச்சியை முன்னிட்டு, ஐர்லாந்துக்குக்கூட இனி ஸ்வராஜ்ய மில்லை என்று மறுத்தல் இங்கிலாந்துக்கு லாத்யப் படாதென்று தீர்ந்து போய்விட்டது.

அப்படியிருக்க, 5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது; முப்பது கோடி ஜனங் களுடையது; இன்றைக்கும் ஜகதீச சந்திரர் முதலிய வர்களின் மூலமாக உலக்த்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழி காட்டுவது; பூமண்ட்ல சரித்திரத் திலே வீர்ய முதலிய ராஜ குணங்களில் நிகரற்ற தாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப் போகிறீர்கள்?