பக்கம்:பாரதித் தமிழ்.pdf/504

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என் ஈரோரு யாத்திரை

சக்திதாஸன் எழுதுகிறார்

4 ஆகஸ்ட் 1921

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வ தேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமி ழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அக வேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவு படுகின்றன.

இதற்குச் சுதேசமித்திரன் முதலிய பத்திரி கைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம். கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இட மில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று: வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஒட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.

அரை மைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளை யத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன். கருங்கல்