பக்கம்:பாரதித் தமிழ்.pdf/506

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஈரோடு யாத்திரை 507

எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடு மென்ற விஷயம்.

ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வ பக்தியும், மன் மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன் கைக்கொண்டிருப்பாயிைன், அவன் இந்த உலகத்தி லேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவனுய், எப்போதும் மகிழ்ச்சி கொண்டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை. இந்தக் கொள்கையை நான் வேதபுராண சாஸ்த் ரங்கள், இதர மத நூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், பூரீமான் ஜகதீஸ்சந்திர வஸாவின் முடிபுகள் என்னும் ஆதாரங்களாலே ருஜுப்படுத்தி னேன். அங்குள்ள பெரிய வித்வான்கள் எல்லோரும் கூடி என்னுடைய தர்க்கத்தில் யாதொரு பழுது மில்லையென்று அங்கீகாரஞ் செய்துகொண்டார். பிறகு மறு நாள் என்னை ஈரோட்டுக்கு வந்து வாய்க் கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்திலே, இந்தியா வின் எதிர்கால நிலை என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக்கொண்டார்கள். நான் உடம் பட்டேன். மறுநாள் கூட்டத்தைப்பற்றிய விஷயங் களே இங்கு விவரித்துக்கொண்டு போனல் இந்த வியாசம் மிகவும் நீண்டு போய்விடும். ஆதலால் இன்று இவ்வளவோடு நிறுத்தி மற்றை நாள் சம்ப வங்களைப்பற்றி நாளை எழுதுகிறேன்.

குறிப்பு:-மேலே கூறியவாறு மற்றாெரு கட்டுரை பாரதியார் எழுதியதாகத் தெரியவில்லை. முயன்று தேடியும் அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.