பக்கம்:பாரதித் தமிழ்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோடி ரூபாய்

காளிதாஸன்

11 ஆகஸ்டு 1921 துன்மதி ஆடி 27

ஸெப்டம்பர் மாஸ்த்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்தியா தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவ்ார்களென்றும் பூரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர்.

ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட் டார்கள். அந்த்த் தொகை எங்ஙனம் செலவிடப் படுகிறது? எப்ப்ோது செலவு தொடங்கப் போகி ருர்கள்? ஒரு மாஸ்த்திலோ, இரண்டு மாஸங் களிலோ, அன்றி இன்னும் ஒரு வருஷத்துக்குள் ளேயோ, ஸ்வராஜ்ய்ம் கிடைக்க வேண்டுமாயின், அந்தத் தொகை ஏற்கெனவே செலவு தொடங்கி யிருக்க வேண்டுமன்றாே?

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்தான் ஸ்வ ராஜ்யம் வரும்’ என்று சொல்லப்பட்ட வார்த் தைக்கு ஒரு பொருள்தான் உண்டு. அதாவது, அந்தப் பணம் ப்ரசாரத் தொழிலிலே செலவிடப் படவேண்டும். நாமோ பலாத்கார முறையை அனு ஸ்ரிக்கவில்லை. எனவே, அந்தக் கோடி ரூபாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/507&oldid=605979" இலிருந்து மீள்விக்கப்பட்டது