பக்கம்:பாரதித் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

51


யாருக்கு இளமையிலிருந்தே பக்தியுண்டு. பராசக்தியின் மேல் அற்புதமான பல பாடல்கள் பாடியிருக்கிறார். கண்ணனும், முருகனும் அவர் உள்ளத்தை ஒருங்கே கவர்ந்திருக்கிறார்கள். கண்ணன் பாட்டு தமிழ் இலக்கியத்திலே தனியிடம் பெறுகின்றது. புதுவை மணக்குளப் பிள்ளையாரின் மேல் விநாயகர் நான்மணிமாலை பாடியிருக்கிறார், தோத்திரப் பாடல்களும், வேதாந்தப் பாடல்களும் அவர் பாடியன எத்தனையோ. இவை யெல்லாம் அவருக்கு ஆத்மிகத் துறையிலிருந்த ஆர்வத்தை நன்கு காண்பிக்கின்றன. வாழ்க்கையிலே துன்பம் உழன்ற பாரதியாருக்குப் பக்தியே வலிமையளித்திருக்கிறது. நாட்டுப் பற்றும் தாய் மொழிப் பற்றும் அவருடைய மூச்சு நின்று போகாமல் உயிரளித்து வந்துள்ளன.

முதல் உலக யுத்தத்தின் இறுதியில் இந்தியாவுக் குப் பல நன்மைகள் ஏற்படும் என்று பலர் எதிர் பார்த்தார்கள். பாரதியாரும் அவர்களில் ஒருவர். யுத்தம் 1918 நவம்பரில் முடிவுற்றது. பாரதியாருக்கு அதற்கு மேலும் புதுச்சேரியில் தங்கியிருக்க மனம் மில்லை. ஏ. ரங்கசாமி ஐயங்காரின் ஆலோசனையின் படி அவர் பிரிட்டிஷ்இந்தியாவுக்குப் புறப்பட்டார். சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருந்தது.

இருப்பினும் நவம்பர் 20-ஆம் தேதியன்று புதுச்சேரி எல்லேயைத் தாண்டியதும் அவரைக் கைது செய்து கடலூரில் சிறையிலிட்டனர். ஆனால் ரங்கசாமி ஐயங்காரின் முயற்சியால் விரைவில் விடுதலை கிடைத்தது. பாரதியார் சென்னைக்கு வந்து, பின் கடயம் சென்று அங்கு சில காலம் வாசம் செய்யலானர். அங்கு வந்த ஒன்றிரண்டு நாட்களில் பாரதியார் சுதேசமித்திரன் ஆசிரியரான ஏ. ரங்க சாமி ஐயங்காருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/51&oldid=1539875" இலிருந்து மீள்விக்கப்பட்டது