பக்கம்:பாரதித் தமிழ்.pdf/515

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 பாரதி தமிழ்

இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் இதுவரை எப்போதும் தவித்தது கிடையாது.) நரகவாதனைப் படுகிற நாம் இன்னும்எதிர்காலத்தில் இந்த மண்மீது தேவலோக அனுபவங்களெய்து வோம் என்று கனவுகள் காண்பதை விடவில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்றாெரு லோகத்தி லிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப்பதற்கு இப்போது நாம் த கு தி பெற்றிருப்பதுபோல் இதுவரை எப்போது மிருந்ததில்லை. இப்போது ஆயத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங்களாலே நன்கு விளங் கிற்று’ என்று அந் நிருபர் கூறுகிறார்,

இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றிப் பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரிவித்தபடியாலே இங்ஙனம் பாரத பூமிக்கு பூலோக குருத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்பதைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம் :

அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள் களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சியேது? துயரமேது? எல்லாம் ஒரே பொரு ளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸ்ந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியிலிருப்பான். இங்ஙனம் மாருத சந்தோஷ நிலையே முக்தி நிலையென்றும் அமர பதமென்றும் கூறப்படுவது. இதனை மனிதன்