பக்கம்:பாரதித் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 பாரதி தழிழ்

எழுதியுள்ளார். கீழ்க்கண்ட அக் கடிதம் சுதேசமித் திரனில் 19-12-1918 தேதியில் வெளிவந்துள்ளது.

கடயம், டிசம்பர் 17

பூரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞர்யிற்றுக்கிழமை (15-ஆம் தேதி) இரவு நான் இவ் வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிக வும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப் பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.

பூரீமதி அனிபெஸண்ட், பூர் மணி அய்யர், பூரீ சி. பி ராமசாமி அய்யர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தை யெடுத்துக் கொண்ட தங்களு டைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரி விக்கும்படி வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள, சி. சுப்பிரமணிய பாரதி

கடயத்திலிருந்து அவர் பர்லி. சு. நெல்லையப் பருக்கு 1918 டிசம்பர் 21-ஆம் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், சுமார் 20 நாட்களுக்கு மேல் பாரதியார் சிறையில் இருந்திருக்கிரு.ர்.

கடயத்திற்கு வரும்போதே பாரதியாரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்துவிட்டது. உள்ளத்திலே உணர்ச்சி வேகம் மாரு திருப்பினும் உடல் ஒடிந்து போய்விட்டது. அவர் ஒரு புது மனிதராகக் காணப் பட்டார்.

புதுச்சேரியிலிருந்து திரும்பிய பாரதியாரைப்

பற்றி திரு. எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு 1921 செப்டம்பர் 17-ஆம் தேதி சுதேசமித்திரன் வார