பக்கம்:பாரதித் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

53


அநுபந்தத்தில் எழுதியுள்ள கட்டுரையில் பின்வரு மாறு கூறுகிறார்.
  “ஸ்ரீமான் பாரதியார் புதுச்சேரியினின்று வந்த பின்பு பழைய பாரதியின் உருவமேயில்லை. ஒரு வங்காளி போன்ற உருவத்தோடு காணப்பட்டார். அதற்கானபடி தலைப்பாகையும் பிறவும் பொருந்தியிருந்தன. அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின. எல்லாம் புதுவிதமாக இருந்தது. ஒரு பிரம்ம ஞானி போன்றும் காணப்பட்டார். அவரைப் பார்த்தாலே உற்சாகந் தோன்றிவிடும். எவ்விதக் கர்வமும் இல்லை. அவர் படிப்பை அவர் அறியார். சிறு குழந்தை போன்றும் இருப்பார். தமக்கென்று ஒரு பெருமையை அவர் வைத்துக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் அவரை உட்கார வைத்துப் பாடச் சொன்னலும் உடனே ஆனந்தத்துடன் பாட ஆரம் பித்து விடுவார். அவர் பாடுங்கால் கூட இருந்து கேட்ட பாக்கியம் நமக்குண்டு. அவர் பாடுகையில் அந்தப் பாட்டின் அத்தனை ரசங்களும் அவரது வதனத்தில் தத்ரூபமாய்த் தோன்றும்-ஜ்வலிக்கும். எவரையும் லக்ஷயம் பண்ணுகிற சிந்தை அவருக்கில்லை. எல்லோருக்கும் வணங்கிய உடம்பாகத் தாழ்ந்து பணிந்து நடந்து கொள்வார். ஆனால் ஏதேனும் நெஞ்சில் எண்ணம் குடிகொண்டுவிட்டால் ரஜபுத்திர வீரனாகி விடுவார்.”
     பழங் கொள்கைகள் சற்று வலிமையாக வேரூன்றி நிற்கும் நாட்டுப்புறத்திலே அவருடைய போக்கு யாருக்கும் திருப்தியளிக்கவில்லை. மேலும் பதின்மூன்று, பதினன்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடயத்திற்குத் திரும்பி வரும் அவரை எத்தனனை பேர் அறிந்து கொண்டிருப்பார்கள்? வறுமையின் பிடி வேறு அங்கேயும் தளராமல் இருந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/53&oldid=1539827" இலிருந்து மீள்விக்கப்பட்டது