பக்கம்:பாரதித் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 பாரதி தமிழ்

இந்த நிலையில்தான் பாரதியார் எட்டையபுரம் சென்று அங்கு சில காலம் தங்குகிறார்; அது சமயம், ஜமீன்தாருக்கு இரண்டு சீட்டுக் கவிகள் 1919 மே 2-ஆம் தேதியில் எழுதியிருக்கிரு.ர். ஆகஸ்டு 6-ஆம் தேதி ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அவற்றால் பயனென்றும் ஏற்படவில்லை.

பிறகு அவர் கடயம் திரும்புகிரு.ர். அங்கிருந்து 28-10-1919-ல் காரைக்குடி சென்று அன்று மாலையே கானடுகாத்தான் போகிறார், அங்கேயே அவரைத் தங்கும்படி செய்ய சில அன்பர்கள் முயன்றிருக் கிரு.ர்கள். ஆனுல் அது வெற்றி பெறவில்லை. அங் கிருந்து காரைக்குடி சென்று அங்கிருந்து கடயத்திற் குத் திரும்புகிறார். அந்தச் சமயத்தில்தான் காரைக் குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின்மீது பாரதியார் வாழ்த்துப் பாடல் பாடினர்.

கடயம் திரும்பிய பிறகு பாரதியார் தமது நூல்களை வெளியிடுவதற்கு ஒரு பெரிய திட்டம் வகுக்கிறார். இது பற்றி அவர் கடையத்திலிருந்து 1920 ஜூன் 28-ஆம் தேதியிட்டு ஒரு ஆங்கிலக் கடிதம் தயாரித்துள்ளார். அதிலே நூல் வெளியீட்டு விவரங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு நூலிலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சிடுவதாகவும் அவ்வாறு நாற்பது நூல்கள் வருமென்றும் அவற்றிற்கு வேண்டிய முதலீட்டிற்காகப் பணம் வேண்டு மென்றும் அதில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் அவர் 1920 ஜூன் 20-ஆம் தேதி யன்று பொட்டல் புதுாரிலே இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை என்ற பொருள்பற்றிப் பேசியுள்ளார்.

கடயத்தில் அதற்குமேல் அவரால் வசிக்க முடியவில்லை. மறுபடியும் சென்னையை நோக்கிப் புறப்பட்டார். சுதேசமித்திரன் மறுபடியும் அன்