பக்கம்:பாரதித் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பாரதி தமிழ்



முரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை நமது கவிஞர்களுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று. கவிராயர் கண்’ என்பதை சக்கு’ என்று சொல்லத் தொடங்கினர். ரஸம் குறைந்தது; சக்கை அதிகப்பட்டது; உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன........ கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டு மென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாய மான கொள்கை.

மேலும், நெடுங் காலத்துக்கு முன்னே எழுதப் பட்ட நூல்கள் அக்காலத்து பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகிறது: பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையாக உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.”

பாரதியாருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் இந்த எளிமையை நாம் காண்கிறோம். உணர்ச்சி நேராக உள்ளத்தைத் தொடுகிறது. அரண்மனையிலே அடைபட்டுக் கிடந்த தமிழ் மக்களின் பொது மேடைகளிலே புத்துயிர் பெற்று அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் வலிமை வாய்ந்த கருவியாக மலர்கிறது. நாடு விடுதலை யடைவதற்கு அறிகுறியாகத் தமிழ் விடுதலை பெற்றது என்று அறிஞர்கள் மகிழ்ந்தார்கள்.

கவிதையைப் பற்றிப் பொதுவாக மேலே கூறும் போது கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டேன். உரைநடையிலும் பாரதியார் சிறந்த இலக்கியம் உண்டாக்கியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/62&oldid=1539828" இலிருந்து மீள்விக்கப்பட்டது