பக்கம்:பாரதித் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதி தமிழ் 63

சாதாரணமாக இக்காலத்திலே பாரதியாரைப் பற்றி நினைக்கும்போது அவருடைய கவிதையைத் தான் மனதில் வைத்துக் கொள்ளுகிருேம். ஒரு காலத்தில் பாரதியார் என்றால் அவருடைய தேசீயப் பாடல்களே நினைவுக்கு வரும். அந்த நிலை மாறி அவருடைய மற்றக் கவிதைகளையும் ஆராய்ந்து அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. ஆனல் இன்னும் அவருடைய உரைநடை இலக்கியத்தைப்பற்றி யாரும் அதிகமாக எண்ணுவதில்லை.

வேகமும், எளிமையும், நேருக்கு நேரான சம்பா ஷனைப் போக்கும், இடையிடையே ஹாஸ்யமும் கலந்து ஒரு புதிய நடையில் பாரதியார் எழுதுகிரு.ர். பேச்சு மொழியை அவர் கையாளுவதிலே ஒரு புதிய ஜீவன் இருக்கிறது. “ஞான ரத'த்தில் அமைந்துள்ள நடை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. அதைக் கவிதை நடை என்றே கூறலாம். அவருடைய உரை நடை யிலே இறந்துபட்ட சொற்கள் இல்லை; உயிருள்ள வழக்குச் சொற்கள் வலிமையோடு இடம்: பெறு கின்றன. இதை அவருடைய கட்டுரைகள், கதைகள், குறிப்புகள் முதலிய எல்லாவற்றிலும் காணலாம். எழுதுவோனது முழுத் தோற்றத்தையும் அவ னுடைய எழுத்து நடை வெளிப்படுத்திவிடும் என்று கூறுவதுண்டு. வலிமையும் உணர்ச்சி வேகமும் ஜீவ்னும் நிறைந்தது பாரதியின் நடை. அது பாரதி யாரின் முழுத்தோற்றப் பொலிவையும் நன்கு காட்டுகிறது.

உரை நடையைக் கையாள்வதிலும் பாரதி யாரின் கலை வளர்ச்சியை நாம் எளிதில் காண முடியும். 1906 பிப்ரவரியில் பாரதியார் ஒரு விண் ணப்பம் செய்துகொள்கிறார். பலராலும் எழுதப் பட்டிருக்கும் சிறந்த தேச பக்திப் பாடல்களைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்பது அவர்