பக்கம்:பாரதித் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதி தமிழ் 65

குறியென்று யோக்யன் ஏன் நினைக்கவேணும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் மன்சில் எ ன் ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் பொருட்டாக உன் சண்ணை நேரே பார்க்கிறேன். விரோதமில்லை. அவமரியாதையில்லை. விஷயம் தெரிந்துகொள்ளும் பொருட்டு.”

“பெண்” என்ற கட்டுரையிலே இடிப் பள்ளிக் கூடத்திலே பிரமராய அய்யருடைய கர்ஜனை யைக் கேளுங்கள்: ‘துருக்கி தேசம் தெரியுமா? அங்கே நேற்று வரை ஸ்திரீகளே மூடி வைத்திருப் பது இவழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ? அந்த மாதிரி. திறந்தால் வாசனை போய்விடும் என்று.’

இவையெல்லாம் பிற்காலத்திலே புதுச்சேரியில் எழுதப்பட்டவை. இவற்றிலே சொல் தடுமாற்றம் கிடையாது. கருத்துக்களும், உணர்ச்சிகளும் நேராக லாகவமாக வழக்கிலுள்ள சொற்களிலேயே வெளி யாகின்றன. இவற்றையெல்லாம் தமிழிலே சொல்ல முடியுமா என்று பெரிதும் ஐயங்கொண்டிருந்த காலத்தில் மிக அழகாகத் தமிழிலே கூறலாம் என்று பாரதியார் காட்டினர். அவருடைய கட்டுரைகளைப் படிக்கும்போது அவர் பலவேறு விஷயங்களைப் பற்றித் தெளிவாக விளக்கியிருப்பது புலனுகும். உலக அரசியல் விவகாரங்களாயினும் சரி, ரவீந்திர நாத தாகூரின் கவிதைகளாயினும் சரி, எல்லா வற்றையும் தமிழிலே பாரதியார் சொந்த எழுத்துப் போல நல்ல முறையிலே மொழி பெயர்த்துத் தருவதையும் நாம் காண்கிருேம்.

பாரதியார் வாழ்ந்த காலம் சுதந்தர உணர்ச்சி அரும்பி மலரத் தொடங்கிய காலம். விண்ணப்ப முறையை விடுத்து அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்ட

பா. த.-5