பக்கம்:பாரதித் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பார்தி தமிழ் 67

வதையும் காண்கிருேம். அக்காலத்தில் மகாத்மா காந்தி வெறும் பூரீமான் காந்தியாகவே இருக்கிறார். இருப்பினும் பாரதியார் காந்தியடிகளின் சத்தியாக் கிரக இயக்கத்தைக் கூர்ந்து கவனித்து வருகிரு.ர். அடிகளின் அன்பிற்கு முன்னல் தென்னப்பிரிக்க வெள்ளையரின் கொடுமை பணிந்து விடுவதைத் தமது இந்தியா பத்திரிகையில் சித்திரம் போட்டு விளக்குகிறார். பி. ற் கால த் தி லே அவரைப்பற்றி மஹாத்மா காந்தி பஞ்சகம்” என்ற பாடலில் போற்றும்போது நுட்பமான தமது க வி தா மேதையால் அவருடைய பெருமையையும், அவ ருடைய அஹிம்சா மார்க்கத்தின் தனிச் சிறப்பையும் உணர்ந்து பாராட்டுகிரு.ர். காந்தியடிகளால் நமது நாட்டிற்குக் கதிமோட்சம் பிறக்குமென்று அவர் காண்கிரு.ர். ஆதலால்தான்,

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற

மூலிகை கொணர்ந்தவ னென்கோ ? என்று அடிகளைப் போற்றுகிரு.ர்.

உயிர்களெல்லாம் கடவுளின் வடிவம் என்பது உயர்ந்ததோர் உண்மை. அந்த உண்மையைக் காந்தியடிகள் கொலையும் போரும் நிறைந்த அரசிய லில் புகுத்தத் துணிந்தது கவிஞருக்குப் பேராச்சரி யத்தை யளிக்கிறது.

இன்ன மெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங் கிழிபடு போர், கொலே, தண்டம் பின்னியே கிடக்கும் அரசியல தனிற்

பின்னத்திடத் துணிந்தனை, பெருமான் ! என்று வியந்து பாராட்டிப் பாடுகிரு.ர்.

மேலும் பாரதியார், நெருங்கிய பயன் சேர் “ஒத்துழையாமை’

நெறியினல் இந்தியாவிற்கு வருங்க தி கண்டு பகைத்தொழில் மறந்து

வையகம் வாழ்கநல் லறத்தே