பக்கம்:பாரதித் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாரதி தமிழ்

ஒன்று. ஆனல் பாரதியார் அதற்கு ஆண்டுச் சந்தா நிர்ணயித்த வழியே தனிப்பட்டது.

தமது பத்திரிகையின் சந்தா. விவரம்

ரு. அ. பை.

எல்லா கவர்ன்மெண்டாருக்கும் 50 0 0 ஜமீந்தார்கள், ராஜாக்கள்

முதலியவர்களுக்கு 30 0 0 மாதம் ரூ. 200-க்கு மேற்பட்ட

வருமானம் உடையவர்களுக்கு 15 0 0 மற்றவர்களுக்கு 3 0 0 இந்தியா சென்னையில் 34, பிராட்வேயிலிருந்து 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெளி யாகியுள்ளது. முதல் இரண்டு தொகுதிகள் ஒரு அளவிலும் மூன்றாம் தொகுதி தொடக்கத்திலிருந்து முன்பு வெளியான அளவைப்போல இரண்டு மடங்கு அளவில் அதாவது தினசரிப் பத்திரிகை அளவிலும் வெளியாகியுள்ளன.

இத்திய பத்திரிகையைப் பற்றி திரு. இரா மாநுஜலு நாயுடு கூறுவதாவது: “அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேச பக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே அனுசரித்து நின்ற ரீமான் ஜீ.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து, இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதற்கு ஆசிரியராய் அமர்ந்தார். அந்தப் பத்திரிகையின் சொந்தக்காரர் வேறொருவராவர். பாரதியாரின் தமிழ் நடை அது முதற்கொண்டு ஒரு புது வழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகை நடத்த வில்லை என்று சொல்லும்வாருக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதி வரத் தொடங்கினர். சிறு