பக்கம்:பாரதித் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாரதி தழிழ்

“இந்தியா பத்திரிகை வரவரக் கார'மாகி விட்டது. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் பாஞ்சாலி சபதம் போல் பெருங் காவியமாகத் தொடர்ச்சியாய்ப் பத்திரி கையில் எழுதி வந்தார். அது முற்றும் வீர ரஸ்மாய் இருந்தது. அதனைத் தனிப் புத்தக உருவமாய் வெளி யிடுவதற்குப் பாரதியார் விரும்பினர். அது ஆபத் தென நண்பர்களால் தடுக்கப்பட்டது. இந்தியா பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரிய ராக இருந்தாரேயன்றி வெளிப்படையாய் அன்று. பூரீ பூரீநிவாசன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்ப வருமென்று பத்திரிகைகளில் வெளி வந்துகொண் டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்று இந்தியா பத்திரிகையில் ப்ாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார்.

‘அவ்வப்போது நடந்தேறிய சம்பவங்களுக் கெல்லாம் சிறு சிறு பாடல்களை இந்தியா பத்திரிகை யில் தமது பெயருடன் வெளியிடுவதானர். வந்தே மாதர கீதத்திற்கு, இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை’ என்று தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டார். அப்பாடல்களின் மூலமாக மட்டும் அவர் பெயரைத் தமிழ் நாட்டினர் அறிந்து வந்தனர்.

‘இந்தியா பத்திரிகைக்குப் பாரதி ஆசிரிய ரென்று எவருமே அறியார். பாரதியாருக்குத் தமிழ் நாட்டிலிருந்த பெயர் இவ்வளவுதான். சென்னையி லுள்ளார் மட்டும், அதிலும் சில முச்சியஸ்தர்கள் மட்டும் உண்மையை உணர்ந்திருந்தனர். தமது பாடல்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஸ்வதேச கீதங்கள் என்று இரண்டணு விலையில் ஒரு புத்தக மாக வெளியிட்டார். அதைக் குறித்து இந்தியா பத்திரிகையில், சுப்பிரமணிய பா ர தி யா ரி ன்