பக்கம்:பாரதித் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி தமிழ்

78



வெளிவரலாயிற்று" (தி. ஜ. ர., புதுமைக் கவி பாரதியார்.)

“1908-ம் ஆண்டில் பாரதியார் இந்தியா பத்திரிகையைப் புதுவை மிஸியோம் எத்திரான் ழேர் வீதியிலிருந்து நடத்தி வந்தார். 1910-ஆம் ஆண்டில் அச்சுக்கூடத்தை டூப்ளே வீதிக்கு மாற்றிக் கொண்டார்” (பாரதியாரின் புதுவை வாழ்வு என்ற கட்டுரையில் திரு.ரா. கனகலிங்கம்.)

ஆனுல் இந்தியா நீண்ட நாள் தொடர்ந்து நடைபெறவில்லை. மக்களின் ஆதரவு புதுவைக்கு எட்டுவதில் உள்ள சிரமம், அதன் விளைவான பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தாரின் கோபம் இவையெல்லாம் இதன் ஆயுளைக் குறைத்து விட்டன. பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இப்பத்திரிகை வரக்கூடாதென்று 1909-ஆம் ஆண்டில் ஆங்கில அரசாங்கம் செய்த தடையே இதன் முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

1909 மார்சு 27-ல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்தியா தொகுதி 1 இதழ் 24-ல் பாரதியாரின் ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகமாகிய ஜன்ம பூமி என்ற நூலைப் பற்றிப் பின்வருமாறு விளம்பரம் காணப்படுகிறது :

ஜன்ம பூமி

ஸ்வதேச கீதங்கள் என்ற நூல் வெளியேறியதற்கப்பால் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரால் எழுதப்பட்ட பாக்களும் கீர்த்தனங்கள் முதலியனவும் அடங்கியது. முதற்பாகத்தைவிட மாதுரியத்திலும் சுதேச பக்தியிலும் சிறப்பு வாய்ந்தது. அச்சடித்துத் தயாராகிவிட்டது. வேண்டியவர்கள் புதுச்சேரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/78&oldid=1539774" இலிருந்து மீள்விக்கப்பட்டது