பக்கம்:பாரதித் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 பாரதி தமிழ்

பூரீ அரவிந்தர் ஒராண்டுக் காலம் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டிருந்து பிறகு விடுதலை பெற்றபோது அச்சம்பவம் பற்றிச் சித்திரமும் சித்திர விளக்கமும் இந்தியாவின் 1909 மே 13-ஆம் தேதி இதழில் வெளியாகியுள்ளன. கிரஹண விமோசனம் என்பது அச் சித்திரத்தின் தலைப்பு.

“அரவிந்த சூரியனை விழுங்க வந்த போலீஸ் பாம்பு நீங்கிப் போய்விட்டது” என்று சித்திரத்தின் அடியிலே எழுதியிருக்கிரு.ர். அப்படத்திற்குக் கீழ்க் கண்ட விளக்கமும் வெளியாகியுள்ளது.

சித்திர விளக்கம்

‘அரவிந்தர் என்ற ஞானச்சுடரை-அரவிந்தர் என்ற தர்ம சூரியனை அநீதியாகக் குற்றம் சுமத் துதல்’ என்ற இராகு வந்து மறைத்திருந்தது. விழுங்கி விடலாமென்பது அந்தப் போலீஸ் பாம்பின் எண்ணம். சூரியனை விழுங்கப் பாம்பால் முடியுமா? சிறிது காலம் மூடியிருந்து பின் தானே அகன்று போய்விட்டது. இதுவே இவ்வாரச் சித்திரத்தின் கருத்து.’

மிதவாதிகளைக் கேலி செய்து பல சித்திரங்கள் வெளிவந்துள்ளன. அக்காலத்தில் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய சாத்வீக இயக் கத்தைப் பாராட்டியும் சித்திரம் வந்துள்ளது.

இந்திய புதுவை சென்றதும் எஸ். திருமலாச் சாரியார் விஜயா என்ற தினசரிப்பத்திரிகை ஒன்றைத் தொடங்கினர். அப்பத்திரிகை முதலில் சென்னையில் 83, ஹைரோடு, திருவல்லிக்கேணி என்ற இடத்தி லிருந்து வெளியாகியிருக்கிறது அதைப்பற்றிய விளம்பரம் 1909 மார்ச்சு 27 இந்திய இதழில் காணப்படுகிறது. அப்பொழுது அதற்கு யார் பத்தி ராதிபர் என்பது தெரியவில்லை. இந்தியா 1909