பக்கம்:பாரதித் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 பாரதி தமிழ்

வெளியான இந்தியா இதழிலுள்ள கீழ்க் கண்ட இரண்டு குறிப்புக்களிலிருந்தும் தெரிந்துகொள்ள லாம்.

தேசபக்தர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கப்பலோட்டிய வீர வரலாறு அனைவருக்கும் தெரி யும். அவர் சிறைப்பட்ட பின்பும் தொடர்ந்து சுதேசியக் கப்பல் விடுவதற்கான பெரு முயற்சி நடந்தது. அதுபற்றித் துத்துக்குடி சுதேசியக் கப்பல் என்ற தலைப்பில் இந்தியாவில் வெளியாகியுள்ள குறிப்பாவது:

‘துரத்துக்குடி சுதேசியக் கப்பலுக்கு இருநூறு ரூபாய் வந்ததற்குப் பிறகு வரவு நின்றுவிட்டது. கப்பல் நிதி என்ற பெயரால் 150 ரூபாய் தூத்துக் குடிக்கு அனுப்பிவிட்டோம். ஆறு பங்காயிற்று. என்ன வெட்கம்! என்ன வெட்கம்! தமிழ் நாட்டு ஜனங்களிடம் அவர்கள் சொந்தக் காரியத்திற்காக இரண்டு லக்ஷம் ரூபாய் கேட்டதற்கு இருநூறு வசூலாகியிருக்கிறது. கப்பலுக்கு ஒரிரண்டு உபகாரி கள் உதவி செய்ய முன் வந்திருப்பதாகவும், இன்னும் இரண்டு வாரங்களிலே கப்பல் முன்போல நடக்கு மென்றும் கேட்டு சந்தோஷமடைகிருேம். நமது பத்திரிகையைப் பார்த்துக் காசியில் ஒரு தேசாபி மானி இவ்விஷயத்திலும் முயற்சி எடுத்து வருவ தாய்த் தெரிவதும் திருப்திக்கிடமான சமாச்சாரம். ஆனல் தமிழ்நாட்டுப் பொது ஜனங்கள் உறங்கிக் கிடக்கும் அற்புதந்தான் வருத்தமுண்டாக்குகிறது. இவர்களை எப்படி விழிக்கச் செய்வது?”

அதே இதழில் தேச பக்தி என்ற தலைப்புடன் மற்றுமோர் குறிப்பு:

‘துருவன், பிரஹ்லாதன் முதலியோர் விஷ்ணு விடத்திலே செலுத்திய பக்தியை நாம் ஸ்வதேசத்தி