பக்கம்:பாரதித் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு 83

னிடத்திலே செலுத்த வேண்டுமென்று நமது பத்திரிகையில் பல முறை எழுதியிருக்கிருேம் பக்திப் பெருமை தெரியாத . ஐரோப்பாவில்கூட ஐர்லாந்து தேசத்தார் நமது தேசத்தில் சுதேசியத்தின் விருத்தி யைப் பார்த்துவிட்டுத் தாமும் சுதேசியத்தை ஒர் பெரும் தர்மம் (மதம்) ஆக்கி நடத்த வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள். சுவாமி விவேகா னந்தர், எனது பாரத புத்திரர்களே, இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்கவேண்டிய தெய் வங்கள் யாதெனில் பாரத தேசத்து முப்பது கோடி ஜனங்களே. இவர்களெல்லாம் மஹா சக்தியின் ஆவிற் பாகங்கள். இவர்களையே நீங்கள் ஆராதனை செய்யவேண்டும். இவர்களுக்கே நீங்கள் தொண்டு செய்ய வேண்டும். இதைக் காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது’ என்று அருளிச் செய்திருக்கிரு.ர்.

‘பாரத நாடு முழுமையும் இம் மதத்தை முற் றிலும் அங்கீகாரம் செய்து கொண்டிருக்கத் தமிழர் கள்மட்டிலும் கொஞ்சம் பின்னடைந்திருக்கிறார்கள். இங்ஙனம் பின்பட்டிருப்பது பிழை. தமிழர்களே, இப் பிழையை நீங்கள் சீக்கிரம் நிவிருத்தி செய்து கொள்ளாத விஷயத்தில் ஸர்வ நாசமடைந்து போவீர்கள். அறிவுடன் வாழுங்கள்.”

1909 ஏப்ரில் 17-ஆம் தேதி இதழிலே செளமிய

என்னும் புது வருஷம் பிறந்ததை ஒட்டி இந்தியா கீழ்க்கண்ட தலையங்கம் எழுதியுள்ளது:

புது வருவும் ‘பாரத வாலிகளுக்குப் புதிய வருவும் பிறந் திருக்கிறது. இவ்வருஷத்தில் தமது நாட்டிற்குப் பல நன்மைகள் விளையுமென்று சில சோதிட சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். ஆனல் சோதிட சாஸ்திரம் என்ன செய்யும்? ஒருவன் கண்மூடித்தனமாக அந்நிய