பக்கம்:பாரதித் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதி தமிழ்

தேச வஸ்திரம் வாங்கும்போது குறுக்கே வந்து நிற்குமா? நன்மையும் தீமையும் மனிதர்கள் தமக்குத் தாமே விளைவித்துக் கொள்ளுகிறார்களல்லாது அவை வெளியிலிருந்து வருவன அல்ல. தத்தம் கரும பலன் களையே எல்லா ஜீவராசிகளும் அநுபவிக்கவேண்டும். நமக்கு நன்மை வரவேண்டுமானுல் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பின்வருவன:

1. நமது தேசப் பொருள்களையே வாங்குதல்; அந்நிய சாமான்களை விலக்குதல்.

2. நாமாகப் பாடசாலைகள் வைத்துக்கொண்டு நமது குழந்தைகளுக்கு ஆரிய தருமங்களைப் போதிப் பித்தல், அந்நியருடைய கல்வியிலேயிருக்கும் நன்மை களைக் கிரஹறித்துக்கொண்டு, தீயதை விலக்கு வதற்குக் கூட்டு முயற்சிகள் செய்தல்.

3. நமது தேசத்தார் இப்போது மிகவும் ஹீன மான சரீர நிலை கொண்டிருப்பதை நீக்கும் பொருட் டாக சரீரப் பயிற்சிக்கூடங்கள் அத்யாவசியமாக ஏற்படுத்துதல்.

4. ஜாதீய பஞ்சாயத்துக்கள் வைத்தல்.

5. கிராமந்தோறும் பாரதமாதா கோயில் என்று ஒர் ஆலயம் ஏற்படுத்தி அநுதினம் பூஜை முதலிய கைங்கர்யங்களுக்கு ஏற்பாடு செய்தல்.

மேலே கூறப்பட்டிருக்கும் தர்மங்களை நாம் சிரத்தையுடன் நடத்தி வருவோமானல் நமது ஜாதிக்கு க்ஷேமமுண்டு; இல்லாவிடின், இல்லை.”

1910 ஜனவரி 22-ஆம் தேதி இந்தியாவில் பால பாாத என்ற ஆங்கில வாரப் பத்திரிகை வெளி யிடுவது பற்றிய விளம்பரம் வந்துள்ளது. இதற்கும் பாரதியாரே ஆசிரியர். இது முன்பு சென்னையில் நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/84&oldid=1539849" இலிருந்து மீள்விக்கப்பட்டது