பக்கம்:பாரதித் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 பாரதி தமிழ்

கண்ணினிர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்

கவினுறும் பர தப்பெருந் தேவியே உண்ணிகழ்ந்திடுந் துன்பங் களைதியால்

உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர் பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது

பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றாே? மண்ணிநீ புகழ் மேவிடவாழ்த்திய

வங்கமே நனி வாழிய வாழிய 3

வங்கம்-தோணி (இது சுதேசிய மாணவர் கடற்கரைக் கூட்டத்தில் பாடியது)

குறிப்பு:-1. திரு.எஸ்.ஜி.இராமாநுஜ லு நாயுடு அவர்கள் தமது பத்திரிகையாகிய அமிர்த குண போதினியில் சென்று போன நாட்கன் என்ற தலைப்பின் கீழ் பாரதியாரைப் பற்றிச் சில குறிப்புக்கள் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். அதிலே, ‘'மித்திரனில் எனது தாய் காட்டின் முன்னுட் பெருமையும் இந்த ட் சிறுமையும் என்று தொடர்ச்சியாக (பாரதியார்) பாடல்கள் எழுதத் தொடங்கினர். மித்திரனில் இதுதான் அவரது முதற் பாடலாகும். இது இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் சேர்க்கப்படவில்லை’ என்று அவர் குறிப்பிடுகிரு.ர். அவர் குறிப்பிடும் பாட்டு இந் நூலில் ஏற்ற இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை எழுதுவதற்கு முன்பே வங்கமே வாழிய என்ற இப்பாடல் சுதேசமித்திரனில் வெளியாகி யிருக்கிறது. அதேபோல இன்னும் நான்கு பாடல்கள் முன்னதாகவே வெளியாகி யுள்ளன. நான் ஆராய்ந்த அளவில் வங்கமே வாழிய என்ற பாடலே சுதேசமித்திரனில் வெளியான முதற் பாடலாகக் காண்கிறது. இப்பாடல் வெளிவந்தபோது பாரதியாருக்கு வயது இருபத்துமூன்று. பாரதியார் 15 செப்டம்பர் 1905க்கு முன்பே பல பாடல்கள் இயற்றியுள்ளதாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியோர் குறிப்பிட் டிருக்கிரு.ர்கள். சிறு வயதிலேயே எட்டையபுரம் சமஸ் தானத்தில் இருந்தபோது இவர் மடல்களும் உலாக்களும் பாடியதாகவும் அவற்றாேடு தனிப் பாடல்கள் பல பாடிய தாகவும் அவை யனைத்தும் மறைந்து போய் விட்டதாகவும் திரு. வ. ரா. எழுதி யிருக்கிறார் (மகாகவி பாரதியார் பக். 12). அந்தக் காலத்திலேயே இவருக்குப் பாரதியார் என்ற