பக்கம்:பாரதித் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 பாரதி தமிழ்

எழுதியிருக்கிரு.ர். அதிலே வெளியிடுவதற்காக வந்தேமாதர கீதத்தை மொழி பெயர்த்துத் தரும்படி பாரதியாரைக் கேட் டுக் கொண்டாராம். இரண்டு மூன்று மாதங்கள் அவருடைய வேண்டுகோள் நிறைவேறவில்லை. பிறகு ஒரு நாள் இரவு சுமார் பத்து மணிக்கு பாரதியார் மஹேச குமார சர்மாவின் வீட்டுக் கதவைத் தட்டினர். அவர் அப்பொழுது சென்னை ஜார்ஜ் டவுனில் வசித்து வந்தார். பாரதியார் திரு வல்லிக்கேணியிலிருந்தார். அந்த நேரத்தில் பாரதியார் வந்தது சர்மாவுக்குச் சற்று ஆச்சரியத்தை விளைவித்தது. ‘சர்மா, பாட்டு வந்துவிட்டது-எழுதிக் கொள். கடற் கரையிலே உட்கார்ந்திருந்தேன். நீ கேட்ட பாட்டு திடீரென்று உத யம்ா பி. ற் று. கடற்கரையோரமாகவே நேராக இங்கு வந்து விட்டேன்’ என்று பாரதியார் கூறினராம்.

பாரதியார் இரண்டு விதமாக இக் கீதத்தை மொழி பெயர்த்திருக்கிறார். இங்குள்ள கட்டுரை அப்பாடலுக்கு நல்ல முன்னுரையாக அமைந்துள்ளது.