பக்கம்:பாரதித் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வேல்ஸ் இளவரசருக்குப் பாத கண்டத்தாய்

நல்வரவு கூறுதல்

(பாரத மாது தானே பணித்தன்று)

29 ஜனவரி 1906

விசுவாவசு தை 17

மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதி இயற்றிய

ஆசிரியப்பா

வருக செல்வ வாழ்கமன் னீயே!

வடமேற் றிசைக்கண் மாப்பெருந் தொலையினார்

பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த

நற்றவப் புதல்வ நல்வர வுனதே.

மேதக நீயுநின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமா றித்தனை காதம்

வந்தனிர் வாழ்திரென் மனமகிழ்ந் ததுவே.

செல்வகேள்! என்னருஞ்சேய்களை நின்னுடை

முன்னோ ராட்சி தொடங்குறூஉ முன்னர்

நெஞ்செலாம் புண்ணுய் நின்றனன் யாஅன்.

ஆயிர வருட மன்பிலா வந்நியர்

ஆட்சியின் விளைந்த அல்லல்க ளெண்ணில

பா. த—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/96&oldid=1539941" இலிருந்து மீள்விக்கப்பட்டது