பக்கம்:பாரதித் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்


18 பிப்ரவரி 1906

விசுவாவசு மாசி 2


எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெரு மையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல் வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப் பெற்ற செய்யுள் மணிகளை ஒர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேனாதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின் அவர்மாட்டு மிக்க கடப் பாடுடையவனாவேன். தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப் படலங்களில் நிடதம் கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட் டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற் காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாக 'தேச பக்தி'ப் பாக்கள் புனைந்தனுப்புவாராயின் அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

சிறிய ஆற்றலுடையேனகிய யான் இப்பெரிய தொழிலை நிறைவேற்றுவதன்கண்ணே எவ்வாற்றானும் துணை புரிய விரும்புவோர் கால பரியயம் செய்யலாகாதென்று பிரார்த்திக்கின்றேன்.

இங்ஙனம்,
சி. சுப்மணிய பாரதி

விலாசம்:- சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/99&oldid=1539846" இலிருந்து மீள்விக்கப்பட்டது