பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{j ஏனென்ருல் காந்தாமணியையும் அக்கிழவியையும் ஒருங்கே தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதா வாகிய பிரமதேவன் கூடக் காந்தாமணியின் ஸந்நிதியில் அந்தக் கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான். அப்படி யிருக்கக் கிழவியின்மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்தஸ்ாரதி ஐயங்காரின் முயற்சி மிகவும் நம்பக்கூடாத மாதிரியில் நடைபெற்று வந்தது. இந்த ஸங்கதியில் மற்ருெரு விசேஷமென்னவென்றல் மேற்படி அய்யங்காரை நான் விருகூடி மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததுபோலவே காந்தாமணியும் கிழவியும் அவரை அடிக்கடி கடைக்கண்ணுல் கவனித்துக் கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது; பருந்தைக் காட்டிலும் கூர்மையான கண். எனவே பார்த்தலாரதி அய்யங்கா ருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரீகளும் கண்டு கொண்டனரென்பதை அவர் களுடைய முகக்குறிகளிலிருந்து தெரிந்து கொண்டேன். என்னை மாத்திரம் அம்மூவரில் யாவரும் கவனிக்க வில்லை. நான் செடி கொடிகளின் மறைவில் நின்று பார்த்தபடியால் என்னை அவர்களால் கவனிக்க முடிய வில்லை. இப்படி யிருக்கையிலே அங்கு இருபது வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் பெருங்காயம் கொண்டு வந்தான். சில்லறையில் பெருங்காயம் விற்பது இவனுடைய தொழில், இவன் பலமுறை அந்தக் கிராமத்துக்குப் பெருங்காயம் கொண்டு வந்து விற்பதை நான் பார்த்திருக்கிறேன். இவனைப்பற்றி வே .ெ மு ன் று ம் நான் விசாரித்தது கிடையாது. இவன் பார்வைக்கு மன்மதன் போலிருந்