பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்துவிட்டிார். அந்த ரீநிவாலாசார்யருடன் வாழக் காந்தாமணிக்கு சம்மதமில்லை. இந்தச் செய்தியெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரியவந்தது. அன்று கிணற்றங்கரையில் என் கண்முன்னே நடந்த விஷயத்தை மேலே சொல்லுகிறேன். காந்தாமணி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, "எங்கம்மா வைவாளே, நான் என்ன சொல்வேனம்மா?' என்று அழுது கொண்டே போனள். ஆல்ை அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்திற்குப் போகவில்லை. நேரே, அந்த ஊருக்கு மேற்கேயுள்ள நதிக்குப் போனுள். தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங்கரையை நோக்கிச் சென்றன். இ த ற் குள் ேள எனக்கு ஸ்ந்தியா வந்தன காலம் நெடுந்துாரம் தவறி விட்டபடியால் நான் அந்தக்கிணற்றடியைவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படி கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று:-, கேட்டீர்களோ, விஷயத்தை; வெகு ஆச்சர்யம்! வெகு ஆச்சர்யம்; என்று கூக்கூரலிட்டார். 'என்ன ஒய் ஆச்சர்யம்? நடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் செளகர்ய மாக இருக்கும்” என்றேன். சத்திரத்திலே ஸப் - இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையுங் கூட்டிக்கொண்டு வந்தார் அவருடைய மகள். அந்தக் குட்டி வெகு அழகாம். திலோர்த்தமை, ரம்பை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வே ண் டு மாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜலம்