பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ளெல்லாரும் என்ன ப்ராயச்சித்தம் பண்ணுகிரு.ர்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டானங்கள் தவரு மல் நடத்திவருகிருனென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதி ப்ரஷ்டன் தானே? ப்ாாயச்சித்தம் பண்ணினல்கூட நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன். தள்ளுங்காணும். ப்ராயச்சித்தமாவது, வெங்காயமாவது! நான் ஏதோ உதர நிமித்தமாக இந்த வைதிகத்தை விடமுடியாமல் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். இதில் மற்றவர் வந்து சேர்வதிலே எனக்கு ஸம்மதமில்லை. ராமராயர் ப்ராயச் சித்தம் பண்ணிக் கொள்ளுவதில் எனக்கு இஷ்டமில்லை, ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் செய்து வைக்கிறேன். ஆக்ஷேபமில்லை. அப்படியே அவர் ப்ராயச்சித்தம் செய் தாலும், நான் அவருடன் பந்தியிலிருந்து சாப்பிட மாட்டேன்' என்ருர். இதை நான் ராமராயரிடம் வந்து சொன்னேன். ராமராயர் ப்ராயச்சித்த யோசனையை நீக்கி விட்டார். பாரதியாரும் பாட்டும் பாரதியார் சிறந்த இசை ஞானம் உடையவர். "கானமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா’ "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பாடியவர் அல்லவா பாரதியார்? ஆகையால் இவர் பாட்டைப் பற்றிக் கூறிய கருத்துகள் மிகுந்த கவனத்தி குரியவை. அவர் தொடர்ந்து பத்து முப்பது கீர்த்தனர் களையே பாடுவதில் தமது அழுத்தமான கண்டனத்தைத் தெரிவிக்கிரு.ர். சங்கீதத்தைப் பற்றி அவர் கூறுவதாவது : "நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்தி கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்கி