உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

அடுத்த இரண்டு மூன்று தினங்களும் திருநெல்வேலியில் "மாகாண ஆசாரத் திருத்த மஹாஸபை” நடைபெறும் என்று தெரிகிறது. 21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹாஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசாரஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு நம் மாகாணத்து ஆசாரத்திருத்தக்காரர், வழக்கப்படி விவாதங்கள் நடத்தி, மாமூலைத் தழுவி சில தீர்மானங்கள் செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப் பார்க்குமிடத்தே, இந்த வருஷம் நடப்பது இருபத்தி ரண்டாவது வருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டு வருடங்களாக இம் மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதேயன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை. ராஜரீக மஹா சபையில் செய்யப்படும் தீர்மானங்கள் காரியத்துக்கு வராவிட்டால், “அதற்கு நாம் என்ன செய்யலாம்? அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே உண்டு. நாம் கேட்க மாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டு மாயின், அதற்கு அதிகாரிகளின் தயவு வேண்டும், அல்லது இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயை வேண்டும். அவை நிறைவேறாமலிருப்பதுபற்றி நம்மீது குறை கூறுதல் பொருந்தாது” என்று சாக்குப்போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறை-