பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


II 2 வேற்றவேண்டியவர்களும் நம்மவரே யன்றிப் பிறரில்லை, அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்ன் மெண்டின் கருணையும் அவசியமில்லை. இதில் நாமே வரல் கேட்டு, நாமே வரங்கொடுக்க வேண்டும். அப்படியிருந் தும், இந்த ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட் டிலுங்கூடக் குறைவான பயன் எய்தியிருப்பதை நோக்கும் போது மிகவும் வருத்தமுண்டாகிறது. இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல் லது வெறும் தோல் பொம்மைகள்தான? இவர்கள் மனித ஹருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தை யும், அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிரும் களா? அல்லது வெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிருர்களா? மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவி களில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி, அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங் கள் செய்து முடிக்கிருர்கள். அப்பால், அத் தீர்மானங்களைத் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடை யிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்துபோடும் குப்பைக்கு நிகராகவே மதிக் கிருர்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனக் களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கை யுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன இந்த விஷயத்தில் ஏராளமான காலவிரயமும் பொருட்